/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோடு நகராட்சியின் மின் கட்டண பாக்கி ரூ.25 கோடி
/
திருச்செங்கோடு நகராட்சியின் மின் கட்டண பாக்கி ரூ.25 கோடி
திருச்செங்கோடு நகராட்சியின் மின் கட்டண பாக்கி ரூ.25 கோடி
திருச்செங்கோடு நகராட்சியின் மின் கட்டண பாக்கி ரூ.25 கோடி
ADDED : செப் 30, 2025 01:40 AM
திருச்செங்கோடு, திருச்செங்கோடு நகராட்சி சாதாரண கூட்டம், சேர்மன் நளினி சுரேஷ் பாபு தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் வாசுதேவன், இன்ஜினியர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த, 41 பேருக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, கூட்டத்தில், 50க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர் தமிழரசன், தி.மு.க.,: என் வார்டில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சீரமைத்து தர வேண்டும். நரி பள்ளம் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்து, கொசு புகை மருந்து அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணற்றுக்கு மின் மோட்டார் அமைத்து கொடுக்க வேண்டும்.
இன்ஜினியர் சரவணன்: நகராட்சியில் மின்சார வாரியத்திற்கு மின் கட்டண பாக்கி, 25 கோடி ரூபாய் உள்ளது. எனவே, புதிய மின்மோட்டார் உடன் கூடிய ஆழ்துளை கிணறு அமைக்க முடியாது. அடி பம்பு சரி செய்து தரப்படும். போர்வெல்லுக்கு புதிதாக மின் மோட்டார் அமைக்க முடியாது என தெரிவித்தார்.
கமிஷனர் வாசுதேவன்: நகராட்சியின் வரவு செலவு இந்த மாதம், 77 லட்ச ரூபாய் பற்றாக்குறையில் உள்ளது. எனவே, நகராட்சியில் செலவினங்களை குறைத்து பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.