/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இரு பைக்குகள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட மூவர் பலி
/
இரு பைக்குகள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட மூவர் பலி
இரு பைக்குகள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட மூவர் பலி
இரு பைக்குகள் மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட மூவர் பலி
ADDED : ஜன 19, 2024 12:04 PM
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே, இரு பைக்குகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், பள்ளி மாணவர்கள் இருவர் உள்பட மூன்று பேர் பலியாகினர்.
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்துள்ள பச்சுடையாம்பட்டி புதுாரை சேர்ந்தவர் கட்டட மேஸ்திரி டேவிட், 25. அதே பகுதியை சேர்ந்த அவரது உறவினர்கள் மோகன்குமார், 25, பூவரசன், 25. இவர்கள் மூவரும் டேவிட்டிற்கு சொந்தமான பல்சர் பைக்கில் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணியளவில் சேந்தமங்கலத்தில் இருந்து, புதன்சந்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
சாலையூர் அருகே சென்ற போது, சேந்தமங்கலம், செல்லியம்மன் பாளையத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் கவுதம், 17, அவரது நண்பர் பச்சுடையாம்பட்டி புதுாரை சேர்ந்த சரவணன், 17, ஆகியோர் டி.வி.எஸ்., விக்டர் பைக்கில், புதன்சந்தையில் இருந்து சேந்தமங்கலம் நோக்கி வந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக இரு பைக்குகளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
விபத்தில் பைக்கில் பயணம் செய்த ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர். தலையில் பலத்த காயமடைந்த டேவிட், பிளஸ் 2 மாணவர் சரவணன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற மூவரையும் மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நள்ளிரவு. 1:00 மணியளவில் பிளஸ் 2 மாணவன் கவுதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். படுகாயமடைந்த பூவரசன், மோகன்குமார் இருவரும் நாமக்கல்லில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்த மூன்று பேரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால், பச்சுடையாம்பட்டி புதுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்த இடத்தை நாமக்கல் போக்குவரத்து துறை ஆர்.டி.ஓ., முருகேசன், வாகன மோட்டார் இன்ஸ்பெக்டர் சக்திவேல் ஆகியோர் பார்வையிட்டனர். சேந்தமங்கலம் இன்ஸ்பெக்டர் கோவிந்தராசன் விசாரணை நடத்தி வருகிறார்.

