/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : மே 23, 2024 07:05 AM
திருச்செங்கோடு : திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், கடந்த, 14ல், வைகாசி விசாக தேர்திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது.மலைக்கோவிலில் எழுந்தருளியுள்ள அர்த்தநாரீஸ்வரர், திருத்தேரில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும், வைகாசி விசாக தேர்திருவிழா, 14 நாட்கள் விமரிசையாக நடக்கும்.
9ம் நாளான, நேற்று, திருக்கல்யாண உற்சவம் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் பரிவாரங்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். தொடர்ந்து, கைலாசநாதர் ஆலயத்தில் அர்த்தநாரீஸ்வரர் மற்றும் வள்ளி தேவி சமேத செங்கோட்டுவேலவர் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் மகா தீபாராதனை நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தல் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை, அர்த்தநாரீஸ்வரர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.