/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
டவுன் பஞ்.,சுடன் கிராம பஞ்., இணைப்பு பொது மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
டவுன் பஞ்.,சுடன் கிராம பஞ்., இணைப்பு பொது மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
டவுன் பஞ்.,சுடன் கிராம பஞ்., இணைப்பு பொது மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
டவுன் பஞ்.,சுடன் கிராம பஞ்., இணைப்பு பொது மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 15, 2024 06:59 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, பிள்ளாநல்லுார், மோகனுார், மல்லசமுத்திரம், ப.வேலுார் ஆகிய டவுன் பஞ்.,களுடன், அருகில் உள்ள கிராம பஞ்.,களோடு ஒன்றிணைத்து, இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்த கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, சேலம் நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் அசோக்குமார், நாமக்கல் கலெக்டருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனால், அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், நகராட்சியுடன் இணைப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மோகனுார் டவுன் பஞ்.,சுடன், பேட்டப்பாளையம், மணப்பள்ளி, குமரிபாளையம், ராசிபாளையம் கிராம பஞ்.,கள் இணைக்கப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன ஆர்ப்பாட்டம், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது. விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். ராசிபாளையம் கிராம பஞ்., தலைவர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார்.இதேபோல், ப.வேலுார் டவுன் பஞ்.,ல் மோகனுார் தாலுகா, ஓலப்பாளையம் கிராம பஞ்., இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகராட்சியுடன் இணைக்கும்போது, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டம் மூலம், 1,000க்கும் மேற்பட்டோர் குடும்பம் நடத்தி வருகின்றனர்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவற்றை சுற்றி உள்ள விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில் செய்யும் மக்கள் பாதிக்கப்படுவர். அதனால், ஓலப்பாளையம் கிராம பஞ்சாயத்தை, நகராட்சியுடன் இணைக்க, கலெக்டர் பரிந்துரை செய்ய வேண்டாம் என, ஓலப்பாளைம் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.