/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம்
/
வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம்
ADDED : மே 07, 2025 02:04 AM
வெண்ணந்துார்:
வெண்ணந்துார் நகர காங்., கமிட்டி கூட்டம், கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர தலைவர் சிங்காரம் தலைமை வகித்தார். கூட்டத்தில், காஷ்மீரில் சுற்றுலா பயணிகள், 26 பேரை கொன்ற தீவிரவாதிகளை முற்றிலும் ஒடுக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சிமென்ட்,
எம்.சாண்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் வீடு கட்டுவோர் பாதிப்படைந்துள்ளனர். மக்கள் நலன் கருதி, கட்டுமான பொருட்களின் விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெண்ணந்துார் அரசு மருத்துவமனை அருகே செயல்பட்டு வந்த இறைச்சி கடைகளை அப்புறப்படுத்திய மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சியனர் பலர் கலந்து
கொண்டனர்.