/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வித்யா விகாஸ் பள்ளி மாணவி; பிளஸ் 2 தேர்வில் முதலிடம்
/
வித்யா விகாஸ் பள்ளி மாணவி; பிளஸ் 2 தேர்வில் முதலிடம்
வித்யா விகாஸ் பள்ளி மாணவி; பிளஸ் 2 தேர்வில் முதலிடம்
வித்யா விகாஸ் பள்ளி மாணவி; பிளஸ் 2 தேர்வில் முதலிடம்
ADDED : மே 09, 2024 06:40 AM
திருச்செங்கோடு : திருச்செங்கோடு, வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்த மாணவி விஜயலட்சுமி, 589 மதிப்பெண் பெற்று, பள்ளியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
அதில், கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றார். இதேபோல், மற்றொரு மாணவி ஜானகி, 583 மதிப்பெண் பெற்று, இரண்டாம் இடம், மாணவி சந்தியா, 575 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடம் பிடித்தனர். 550க்கு மேல், 24 பேரும், 500க்கு மேல், 86 பேரும் மதிப்பெண் பெற்றனர்.
மேலும், கணினி அறிவியலில், 12, வணிகவியல், 6, கணிதம், 4, இயற்பியல், 3, பிரெஞ்சு, 4 மாணவர்கள், 100க்கு, 100 மதிப்பெண்களும், தமிழில் இரண்டு மாணவர்கள், 99 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை, வித்யா விகாஸ் கல்வி நிறுவன மேலாண் அறங்காவலர்கள் குணசேகரன், சிங்காரவேல், ராமலிங்கம், முத்துசாமி, இயக்குனர் ஞானசேகரன், வித்யா விகாஸ் மெட்ரிக் பள்ளி முதல்வர் சீராளன் உள்ளிட்ட ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.