/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சணல்' பொருட்கள் தயாரிப்பு பெண்களுக்கு தொழிற்பயிற்சி
/
'சணல்' பொருட்கள் தயாரிப்பு பெண்களுக்கு தொழிற்பயிற்சி
'சணல்' பொருட்கள் தயாரிப்பு பெண்களுக்கு தொழிற்பயிற்சி
'சணல்' பொருட்கள் தயாரிப்பு பெண்களுக்கு தொழிற்பயிற்சி
ADDED : நவ 23, 2024 01:25 AM
'சணல்' பொருட்கள் தயாரிப்பு
பெண்களுக்கு தொழிற்பயிற்சி
ராசிபுரம், நவ. 23-
தொழில் முனைவோரை ஊக்குவிக்க, மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால், 1991ல், 'சிப்போ' என்ற சிறு தொழில் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் மத்திய அரசின் தேசிய சணல் வாரியத்துடன் இணைந்து, சணல் பொருட்களை தயாரிக்கும் பயிற்சியை வழங்கி வருகிறது. சணல் சார்ந்த பொருட்கள் குறித்த விழிப்புணர்வு பட்டறைகள், ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு சந்தைப்படுத்த பயிற்சிகள், பயிற்சிக்கு பின் தயாரிக்கப்படும் பொருட்களை சந்தைப்படுத்த கண்காட்சி உள்ளிட்டவைகளை, 'சிப்போ' நிறுவனம் செய்து வருகிறது. இதுவரை, 500க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்களை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், ராசிபுரம் பகுதி பெண்களுக்கு சணல் உற்பத்தி பொருட்களை தயாரிப்பதற்கான அடிப்படை பயிற்சி, நேற்று தொடங்கியது. டிச., 24 வரை இப்பயிற்சி நடக்கிறது. பயிற்சி நிறைவில் சான்றிதழ், அடையாள அட்டை வழங்கப்படும். மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சகுந்தலா, பயிற்சியை தொடங்கி வைத்தார். சிப்போ நிறுவன பொது மேலாளர் பழனிவேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.