/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதன் மாட்டுச்சந்தையில் ரூ.2.80 கோடிக்கு வர்த்தகம்
/
புதன் மாட்டுச்சந்தையில் ரூ.2.80 கோடிக்கு வர்த்தகம்
புதன் மாட்டுச்சந்தையில் ரூ.2.80 கோடிக்கு வர்த்தகம்
புதன் மாட்டுச்சந்தையில் ரூ.2.80 கோடிக்கு வர்த்தகம்
ADDED : ஜூன் 18, 2025 01:18 AM
சேந்தமங்கலம், புதுச்சத்திரம் யூனியன், புதன்சந்தை பகுதியில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை மாட்டுச்சந்தை கூடுவது வழக்கம். திங்கள் இரவு தொடங்கி, செவ்வாய் மதியம் வரை இந்த சந்தை செயல்படும். தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்கவும், விற்கவும் வருகின்றனர். இதனால், கோடிக்கணக்கில்
வர்த்தகம் நடைபெறும்.
அதன்படி, நேற்று நடந்த சந்தைக்கு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் உள் மாவட்டங்களில் இருந்து பால் மாடுகள், இறைச்சி மாடுகள் குறைந்தளவே விற்பனைக்கு கொண்டு வந்தனர். மாடுகளை வாங்குவதற்காக வந்திருந்த வியாபாரிகள் எண்ணிக்கை குறைந்தே காணப்பட்டது. இறைச்சி மாடுகள், 30,000 ரூபாய், கறவை மாடுகள், 47,000 ரூபாய், கன்றுக்குட்டிகள், 21,000 ரூபாய் என, மொத்தம், 2.80 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையாகின.