/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நலவாரிய உறுப்பினர் 1.50 லட்சம் பேருக்கு ரூ.150 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்
/
நலவாரிய உறுப்பினர் 1.50 லட்சம் பேருக்கு ரூ.150 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்
நலவாரிய உறுப்பினர் 1.50 லட்சம் பேருக்கு ரூ.150 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்
நலவாரிய உறுப்பினர் 1.50 லட்சம் பேருக்கு ரூ.150 கோடியில் நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : டிச 15, 2024 03:09 AM
நாமக்கல்: ''மாவட்டத்தில், 1.50 லட்சம் நலவாரிய உறுப்பினர்களுக்கு, 150 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்-கப்பட்டுள்ளது,'' என, நாமக்கல் கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கட்டுமான தொழிலா-ளர்கள் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரிய செயல்-பாடுகள் குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக்-கூட்டம் நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதா-வது:நாமக்கல் மாவட்டத்தில் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தில், 1,78,165 பேர், தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில், 21,317 பேர், தமிழ்-நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில், 1,37,723 பேர் என, மொத்தம், 3,37,205 பேர் பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்களை நல-வாரியத்தில் பதிவு செய்யும் வகையில், 49 முகாம்கள் நடத்தப்-பட்டு, 189 வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்-பட்டுள்ளனர். மேலும், இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்-களை நலவாரியத்தில் பதிவு செய்யும் வகையில், 19 சிறப்பு பதிவு முகாம்கள் நடத்தப்பட்டு, 68 தொழிலாளர்கள் உடலு-ழைப்பு தொழிலாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்க-ளுக்கு, 1,26,917 பேருக்கு, 28.80 கோடி ரூபாய் மதிப்பில் கல்வி உதவித்தொகை, 19,589 பேருக்கு, 109.08 கோடி ரூபாய் மதிப்பில் ஓய்வூதியம், 9 பேருக்கு, 1.11 லட்சம் ரூபாய் மதிப்பில் குடும்ப ஓய்வூதியம், 1,845 பேருக்கு, 6.98 கோடி ரூபாய் மதிப்பில் இயற்கை மரணம் உள்பட, 1,50,852 பேருக்கு, 150 கோடி ரூபாய் மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்-டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தனித்துணை கலெக்டர் பிரபாகரன், தொழிலாளர் உதவி ஆணையர் இந்தியா உள்பட பலர் பங்கேற்றனர்.