/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஜவஹர் பஜாரில் கூடுதல் பாதுகாப்பு எப்போது: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
/
ஜவஹர் பஜாரில் கூடுதல் பாதுகாப்பு எப்போது: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஜவஹர் பஜாரில் கூடுதல் பாதுகாப்பு எப்போது: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஜவஹர் பஜாரில் கூடுதல் பாதுகாப்பு எப்போது: பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 05, 2025 01:09 AM
கரூர், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், வியாபார நிறுவனங்கள் அதிகம் உள்ள கரூர் ஜவஹர் பஜாரில், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்கள் நடப்பதை தடுக்க கூடுதல் போலீசாரை, பாதுகாப்புக்காக நியமனம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
நாடு முழுவதும் வரும், 20ல் தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக பொதுமக்கள் புத்தாடை, தங்க நகைகள் வாங்க தொடங்கியுள்ளனர். கரூரை பொறுத்தவரை ஜவஹர் பஜார், கோவை சாலையில் அதிகளவில் ஜவுளி நிறுவனங்கள், நகை கடைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன.
வழக்கமாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகையின் போது, ஜவஹர் பஜாரில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஆனால், தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், ஜவஹர் பஜாரில் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஆனால் அங்குள்ள புறக்காவல் நிலையத்தில் பெரும்பாலும் போலீசார் பணியில் இருப்பது இல்லை.
மேலும் கரூர் டவுன், வெங்கமேடு, தான்தோன்றிமலை மற்றும் பசுபதிபாளையம் போலீஸ் சரக பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்கள், கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பஸ் ஸ்டாண்ட் பகுதி, சேலம் பைபாஸ் சாலை, திருச்சி சாலை (காந்தி கிராமம்) பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, தீபாவளி பண்டிகை நேரத்தில், இது போன்று நடக்காமல் இருக்க ஜவஹர் பஜார் உள்ளிட்ட பகுதிகளில், கூடுதல் போலீசாரை பாதுகாப்புக்காக நியமிக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.