/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தொழிலாளி தற்கொலை முத்தரப்பு பேச்சுவார்த்தை
/
தொழிலாளி தற்கொலை முத்தரப்பு பேச்சுவார்த்தை
ADDED : அக் 27, 2024 04:24 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், வட்டமலை ஜோதி நகரை சேர்ந்தவர் விசைத்-தறி தொழிலாளி ஞானசேகரன், 47. இவர், சில நிதி நிறுவனங்-களில் கடன் பெற்றுள்ளார். அதனை முறையாக திருப்பி செலுத்-தாததால், கடன் கொடுத்தவர்கள் பணம் கேட்டு வற்புறுத்தி வந்-துள்ளனர்.
இதனால் மனமுடைந்த ஞானசேகரன், நேற்று முன்-தினம் மதியம், 12:00 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், நிதி நிறுவனங்கள் மீது நடவ-டிக்கை எடுக்க வேண்டியும், உயிரிழந்த நபரின் குடும்பத்தாருக்கு நிவாரணம் கேட்டும், மா.கம்யூ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதையடுத்து, தாலுகா அலுவலகத்தில் டி.எஸ்.பி., இம-யவர்மன், ஆர்.டி.ஓ., சுகந்தி, இன்ஸ்பெக்டர் தவமணி, நிதி நிறு-வன அலுவலர்கள், இறந்தவர் குடும்பத்தாரிடையே பேச்சு-வார்த்தை நடந்தது.அதில், நிதி நிறுவன அலுவலர்கள், காலை, 9:00 முதல், மாலை, 6:00 மணி வரை மட்டுமே வசூல் பணியில் ஈடுபட வேண்டும். பணம் வாங்கியவர்கள், 2 தவணை செலுத்தாத பின்தான், பணம் வசூலிக்க போக வேண்டும். விதிமுறை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என ஆர்.டி.ஓ., சுகந்தி, டி.எஸ்.பி., இமயவர்மன் எச்சரிக்கை விடுத்தனர்