/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
உலக போலியோ தின விழிப்புணர்வு பேரணி
/
உலக போலியோ தின விழிப்புணர்வு பேரணி
ADDED : அக் 25, 2024 01:09 AM
உலக போலியோ தின விழிப்புணர்வு பேரணி
நாமக்கல், அக். 25-
நாமக்கல், கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லுாரியில், உலக போலியோ தினத்தை முன்னிட்டு ரோட்ராக்ட் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில், பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். மாவட்ட வன அலுவலர் கலாநிதி, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். கல்லுாரி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணி, திருச்சி சாலை, மோனுார்-பரமத்தி பிரிவு சாலை, மணிக்கூண்டு, பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன் வழியாக மீண்டும் கல்லுாரி வந்தடைந்தது. கவிஞர் ராமலிங்கம் கல்லுாரி மாணவிகள் உள்ளிட்ட பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
* ராசிபுரத்தில், சர்வதேச போலியோ தினத்தையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கத் தலைவர் முருகானந்தம் தலைமையில், டி.எஸ்.பி., விஜயகுமார், ராசிபுரம் நகர மன்றத் தலைவர் கவிதா, மாவட்ட ரோட்டரி ஆளுநர் சிவக்குமார் ஆகியோர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
பின், போலியாவை முடிவுக்கு கொண்டு வருவோம் என பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், ரோட்டரி நிர்வாகிகள் ஒன்று திரண்டு உறுதியேற்றனர். விழிப்புணர்வு பேரணியில் ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம், ராசிபுரம் எஜூகேசனல் சிட்டி ரோட்டரி கிளப், ரோட்டரி கிளப் ஆப் ராசிபுரம் ராயல், இன்னர் வீல் சங்க நிர்வாகிகள், அரசு, தனியார் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.