/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரத்து குறைவால் மஞ்சள் ஏலம் ரத்து
/
வரத்து குறைவால் மஞ்சள் ஏலம் ரத்து
ADDED : அக் 02, 2024 01:59 AM
வரத்து குறைவால்
மஞ்சள் ஏலம் ரத்து
நாமகிரிப்பேட்டை, அக். 2-
நாமகிரிப்பேட்டை ஆர்.சி.எம்.எஸ்.,சில் வாரந்தோறும் மஞ்சள் ஏலம் நடத்தப்படுகிறது. ஈரோட்டிற்கு அடுத்த பெரிய மஞ்சள் மார்க்கெட் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. 17 தனியார் மண்டிகளும், ஆர்.சி.எம்.எஸ்., ஆகியவை மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை குறைந்தபட்சம், 50 லட்சம் ரூபாய் வரை விற்பனையாகும்.
கடந்த வாரம், 400 மூட்டைகளுக்கு மேல் மஞ்சள் விற்பனை இருந்தது. ஆனால், இந்த வாரம் மஞ்சள் மூட்டை வரத்து, 50 மூட்டைக்கும் குறைவாக இருந்ததால், ஆர்.சி.எம்.எஸ்.,சில் மஞ்சள் ஏலம் ரத்து செய்யப்பட்டது. இதனால், தனியார் மண்டிகளிலும் ஏலம் நடக்கவில்லை. அடுத்த வாரம் செவ்வாய்கிழமை வழக்கம்போல் மஞ்சள் ஏலம் நடக்கும் என, ஆர்.சி.எம்.எஸ்., அதிகாரிகள் தெரிவித்தனர்.