ADDED : ஜூலை 23, 2025 01:46 AM
நாமகிரிப்பேட்டை, நாமக்கல் மாவட்டத்தில், மஞ்சள் விற்பனையில் நாமகிரிப்பேட்டை முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, இந்திய அளவில் உள்ள முக்கிய மஞ்சள் சந்தையில் நாமகிரிப்பேட்டையும் ஒன்று. இங்கு கூட்டுறவு அமைப்பான ஆர்.சி.எம்.எஸ்., ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் மண்டிகள் மூலம் வாரந்தோறும் செவ்வாய்கிழமை மஞ்சள் விற்பனை நடந்து வருகிறது. நேற்று நடந்த ஏலத்தில் விரலி ரகம், 100 கிலோ மூட்டை குறைந்தபட்சம், 12,702 ரூபாய், அதிகபட்சம், 14,699 ரூபாய்; உருண்டை ரகம் குறைந்தபட்சம், 11,002 ரூபாய், அதிகபட்சம், 12,639 ரூபாய்; பனங்காலி, 7,205 ரூபாயிலிருந்து, 8,155 ரூபாய்க்கு விற்பனையானது. விரலி, 200, உருண்டை, 47, பனங்காலி, 3 என, 250 மூட்டை மஞ்சள், 19 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
மஞ்சளை காயவைத்து, ஜலித்துதான் விற்பனைக்கு கொண்டு வருவர். கடந்த வாரம், ராசிபுரம் சுற்றுவட்டார பகுதியில் வெயில் குறைவாக இருந்ததால், மஞ்சளை தயார் செய்யும் பணி பாதிக்கப்பட்டது. கடந்த வாரம், 56 லட்சம் ரூபாய்க்கு விற்ற நிலையில், இந்த வாரம், 19 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.