/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
இளம் பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
/
இளம் பெண் தற்கொலை ஆர்.டி.ஓ., விசாரணை
ADDED : டிச 16, 2024 03:16 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த ரெட்டிப்பட்டி தோகைநத்தத்தை சேர்ந்த மகேந்-திரன் மனைவி பவானி சசி, 25. இவர்கள் இருவரும், 6 ஆண்டுக-ளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிய-ருக்கு, 5 வயதில் ஒரு மகன், 3 வயதில் ஒரு மகள் உள்ளனர். மகேந்திரன் கடந்த ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் இருந்-துள்ளார்.
இதனால் அவர்களுக்கு இடையே, நேற்று முன்தினம் மாலை தக-ராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, மகேந்திரன் வெளியில் கடைக்கு சென்று விட்டார். வீடு திரும்பியபோது, கதவு உள்புற-மாக தாழ்பாள் போடப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பவானி சசி சேலையால் துாக்கிட்டு தற்-கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து, பவானி-சசியின் தாயார் வாசுகி அளித்த புகார்படி, நாமக்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.மேலும், பவானிசசிக்கு, திருமணமாகி ஆறு ஆண்டுகளே ஆவதால், நாமக்கல் ஆர்.டி.ஓ., பார்த்தீபன் விசாரணை நடத்தி வருகிறார்.

