ADDED : ஜன 21, 2025 06:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேந்தமங்கலம்: காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் இரவு நேரத்தில் செல்பவர்க-ளிடம், மர்ம நபர்கள் மொபைல் போன், பணம் ஆகியவற்றை வழிப்பறி செய்வதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது.
இதையடுத்து, சேந்தமங்கலம் போலீசார், குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காளப்பநாய்க்கன்பட்டியில் சுற்-றித்திரிந்த வாலிபர் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் பிடித்து விசா-ரித்தனர்.
அப்போது, அவர் சேந்தமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த தினேஷ், 20, என்பதும், அவர் காளப்பநாய்க்கன்பட்டி பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.