/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மரத்தை உடைத்த கார் உயிர் தப்பிய இளைஞர்கள்
/
மரத்தை உடைத்த கார் உயிர் தப்பிய இளைஞர்கள்
ADDED : செப் 07, 2025 12:46 AM
குமாரபாளையம் :கேரளா மாநிலம், கொச்சியை சேர்ந்த நண்பர்கள் விஷாக், 24, எல்விஸ் டென்னி, 25; இருவரும் பெங்களூரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம், ஓணம் விடுமுறையால், காரில் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். பின், மீண்டும் கொச்சியில் இருந்து பெங்களூருக்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். விஷாக், காரை ஓட்டினார். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலை, வட்டமலை பகுதியில் கார் சென்றுகொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்து கார் பறந்து சென்று சாலையோரம் இருந்த மரத்தை உடைத்து, கீழே விழுந்தது.
இந்த விபத்தில் கார் முழுவதும் சேதமடைந்த நிலையில், காரில் பயணம் செய்த, இரண்டு இளைஞர்களும் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, 'சிசிடிவி' காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.