/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
4,293 பிற மாவட்ட பதிவு எண் வாகனங்கள் ஆவணங்களை சமர்பித்து இ - பாஸ் பெறலாம்
/
4,293 பிற மாவட்ட பதிவு எண் வாகனங்கள் ஆவணங்களை சமர்பித்து இ - பாஸ் பெறலாம்
4,293 பிற மாவட்ட பதிவு எண் வாகனங்கள் ஆவணங்களை சமர்பித்து இ - பாஸ் பெறலாம்
4,293 பிற மாவட்ட பதிவு எண் வாகனங்கள் ஆவணங்களை சமர்பித்து இ - பாஸ் பெறலாம்
ADDED : மே 07, 2024 11:30 PM
ஊட்டி:நீலகிரியில் பிற மாவட்ட பதிவு எண் வாகனங்கள், 4,293 வாகனங்கள் இருப்பது வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தெரியவந்துள்ளது.
கோடை சீசன் சமயங்களில், ஊட்டிக்கு சராசரியாக, 20 ஆயிரம் வாகனங்கள் வருகிறது. சுற்றுலா வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை ஐ-கோர்ட் உத்தரவுப்படி, இ - பாஸ் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியது.
நேற்று முதல், வருகை தரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வணிக ரீதியாக வருபவர்கள் இ--பாஸ் பெறுவதற்கு, epass.tnega.org என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நடைமுறை ஜூன், 30ம் தேதி வரை இருக்கும்.
4,293 பிற மாவட்ட பதிவு எண்
இதில், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள், நீலகிரி மாவட்ட பதிவு எண் (டி.என்.43) பெற்றிருந்தால் அந்த வாகனத்திற்கு இ - பாஸ் தேவையில்லை. அதே சமயத்தில் இம்மாவட்டத்தில் பிற மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை வாங்கி, வாகன உரிமை மாற்றம் செய்திருக்கும் பலர் உள்ளனர்.
அவர்கள் வாகனத்தின் அசல் பதிவுசான்று, காப்புசான்று மற்றும் நடப்பில் உள்ள புகை சான்று ஆகியவற்றுடன் ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகி ஆவணங்களை சமர்ப்பித்தால் இ - பாஸ் வழங்கப்படும்.
ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில்,''பிற மாவட்ட பதிவு எண் வாகனங்கள், 4,293 இருப்பது வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் தெரியவந்துள்ளது. இந்த வாகனங்களின் உரிமையாளர்கள் உரிய ஆவணங்களை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சமர்பித்தால் சரி பார்க்கப்பட்டு, மொபைல் போனுக்கு எஸ்.எம்.எஸ்., வரும். அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்,'' என்றார்.

