/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் காட்டேரி பூங்கா
/
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் காட்டேரி பூங்கா
ADDED : மே 16, 2024 06:05 AM
குன்னுார் : 'குன்னுாரில் பசுமை சூழலில் உள்ள காட்டேரி பூங்காவை, சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வரும் போதே கண்டு ரசித்து செல்லலாம்,' என, தோட்டக்கலை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குன்னுார்-- மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் உள்ள காட்டேரி பூங்காவில், நடப்பாண்டு கோடை சீசனுக்காக, 'மெரிகோல்டு, பிளாக்ஸ், ஆன்டிரினம், பெடுனியா, பால்சம், ஆஸ்டர், அலிசம், ஜினியா,'என 30 வகைகளில் நாற்றுக்கள் நடவு செய்யப்பட்ட மலர்கள் தற்போது பூக்க துவங்கியுள்ளது.
கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் காலை நேரங்களிலேயே காட்டேரி பூங்காவிற்கு வந்து ரசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், குன்னுார் - மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிபாதையாக மாற்றப்பட்டு, கோத்தகிரி வழியாக வாகனங்கள் திருப்பி விடப்படுவதால், ஊட்டிக்கு சென்ற பிறகு காட்டேரி பூங்காவிற்கு வர நினைக்கும் பல சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
தோட்டக்கலை துறையினர் கூறுகையில், 'ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் சூழ்ந்த பசுமை நிறைந்த காட்டேரி பூங்காவை ரசித்த பிறகு மற்ற இடங்களுக்கு செல்ல வேண்டும்,' என்றனர்.