ADDED : ஏப் 18, 2024 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி நகரில் கால்நடைகள் நடமாட்டத்தால், மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
ஊட்டி சேரிங்கிராஸ்- கார்டன் சாலையில் நாள்தோறும் மாடு, குதிரை, எருமை போன்ற கால்நடைகள் காலை; இரவு நேரங்களில் அதிகளவில் நடமாடுவதால், இரு சக்கர வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. சில நேரங்களில் கால்நடைகள் கும்பலான சாலைகளில் ஓடுவதால், சுற்றுலா பயணிகள் அச்சத்தில் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, ஊட்டி நகராட்சி நிர்வாகம் நகரின் முக்கிய பகுதிகளில் கால்நடைகள் உலா வருவதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

