/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சகோதரியை கத்தியால் குத்திய பாசக்கார சகோதரன் கைது
/
சகோதரியை கத்தியால் குத்திய பாசக்கார சகோதரன் கைது
ADDED : செப் 11, 2024 03:01 AM
பாலக்காடு;பாலக்காடு அருகே, நண்பருடன் சினிமாவுக்கு சென்றதால், சகோதரியை கத்தியால் குத்திய சகோதரனை போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், எலப்புள்ளி நோம்பிக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்; கூலி தொழிலாளி. இவரது மனைவி ஹேமா. இவர்களுக்கு சூரஜ், 25, ஆர்யா, 19, என, இரு மகன், மகள் உள்ளனர். ஆர்யா பேஷன் டிசைனிங் படிக்கிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த சூரஜ், தன் நண்பருடன் சினிமாவுக்கு சென்றதாக குற்றம்சாட்டி, ஆர்யாவுடன் தகராறு செய்துள்ளார். அப்போது, கோபமடைந்த சூரஜ், காய்கறி நறுக்கும் கத்தியால் ஆர்யாவை சரமாரியாக குத்தினார்.
அலறல் சப்தம் கேட்டு, வீட்டினுள் ஓடி வந்த அம்மா, ஆர்யாவை மீட்டு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். இதனிடையே தப்பியோட முயன்ற சூரஜை, அப்பகுதி மக்கள் பிடித்து புதுச்சேரி (கசபா) போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இன்ஸ்பெக்டர் ஜெயராஜன் கூறுகையில், 'இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடக்கிறது. ஆர்யாவின் உடலில், 10 இடங்களில் கத்திக்குத்து காயங்கள் ஏற்பட்டுள்ளது,' என்றார்.