ADDED : செப் 10, 2024 02:38 AM
கூடலுார்;கூடலுார் பகுதியில் கடந்த வாரம் மழையின் தாக்கம் குறைந்திருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவில் இருந்து, இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிர் ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள், பசுந்தேயிலை பறிக்க சிரமப்பட்டு வருகின்றனர். கட்டடம் சார்ந்த தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளது. மழை தொடர்வதால், பசுந்தேயிலை பணி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், 'நடப்பாண்டு துவக்கத்தில் நான்கு மாதங்கள் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மே மாதம் முதல் மழை பெய்தது. கடந்த இரண்டு வாரங்களாக மழையின் தாக்கம் சற்று குறைந்து இருந்த நிலையில், மீண்டும் மழையின் தாக்கம் அதிகரித்து, விவசாய பணிகள் உட்பட அன்றாட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.