ADDED : ஜூலை 21, 2026 03:51 PM
அ நிறம் | அளவு
பாலக்காடு: பாலக்காடு அருகே, குந்திப்புழை ஆற்றில் குளித்த முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
கேரளா மாநிலம், பாலக்காடு மாவட்டம், மண்ணார்க்காடு பகுதியை சேர்ந்தவர் வேலாயுதன்,67. லாட்டரி விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை மாசப்பரம்பு என்ற பகுதியில் உள்ள குந்திப்புழை ஆற்றில் அவர் குளித்தார்.
அப்போது, நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கினார். இதை கண்ட அப்பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி நீண்ட நேரம் தேடியும் அவரை மீட்க முடியவில்லை. தீயணைப்பு படையினரும் போலீசாரும், பொதுமக்களும் இணைந்து நடத்திய தேடுதலில் உடலை மீட்டனர்.
மண்ணார்க்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.
