/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சிறப்பு மலை ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு
/
சிறப்பு மலை ரயில்கள் இயக்க எதிர்பார்ப்பு
ADDED : மார் 04, 2025 11:15 PM

குன்னுார்; 'ஊட்டிக்கு, கோடை சீசனுக்கான சிறப்பு ரயில்களை முன்னதாக இயக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுாரில் இருந்து, ஊட்டிக்கு தினமும் காலை, 7:45 மணி; பகல் 12:35 மணி; மாலை 4:00 மணிக்கும்; ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு காலை 9:15 மணி; பகல் 12:15 மணி; மாலை 5:30 மணிக்கும் தினமும் மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதே போல, மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை, 7:10 மணிக்கு, 4 பெட்டிகளுடன் புறப்படும் மலை ரயில், குன்னுார் வருகிறது. அங்கு கூடுதலாக ஒரு பெட்டி இணைத்து, 5 பெட்டிகளுடன், காலை, 10:40 மணிக்கு ஊட்டிக்கு செல்கிறது. இந்த ரயில் ஊட்டியில் மதியம், 2:10 மணிக்கு புறப்பட்டு, மேட்டுப்பாளையத்திற்கு செல்கிறது. இந்த மலை ரயில்களில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள், ஆர்வம் காட்டுவதால், முன்பதிவு செய்து பயணிக்கின்றனர்.
தற்போது, வார நாட்களிலும் கூட்டம் அதிகரித்துள்ளது. பொதுவாக கோடை சீசன் மற்றும் பண்டிகை, விழா காலங்களில் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோடை சீசனுக்கான சிறப்பு ரயில்கள் கடந்த ஆண்டு, மார்ச் இறுதியில் துவங்கியது.
பயணிகள் கூறுகையில், 'நடப்பாண்டு கோடையின் தாக்கம் அதிகரித்து வருவதால், இந்த ஆண்டு சிறப்பு ரயில்களை முன்னதாக இயக்க வேண்டும்,'என, வலியுறுத்தப்பட்டுள்ளது.