ஊட்டியில் ‘பிளாஸ்டிக்’ சோதனை கடைகள், ஓட்டல்களுக்கு அபராதம்
ஊட்டியில் ‘பிளாஸ்டிக்’ சோதனை கடைகள், ஓட்டல்களுக்கு அபராதம்
ADDED : ஜூலை 20, 2026 06:32 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டியில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய ஓட்டல்கள் மற்றும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி நகராட்சி நிர்வாகம் சார்பில், சுகாதார உதவி ஆய்வாளர் வைரம் தலைமையிலான குழுவினர் ஊட்டியில் உள்ள, 10க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் ஓட்டல்களில் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு சில கடைகளில் தடை விதிக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பொருட்ள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. தொடர்ந்து, ‘இரண்டு ஓட்டல்கள், ஒரு ஜூஸ் கடை மற்றும் ஆவின் பாலகம்,’ என, 17,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
