தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ குப்பை குவியல் நோய் அபாயம்

குப்பை குவியல் நோய் அபாயம்

குப்பை குவியல் நோய் அபாயம்


ADDED : ஜூலை 29, 2026 06:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 29, 2026 06:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோத்தகிரி: கோத்தகிரி -கட்டபெட்டு இடையே, ஒரசோலை முக்கிய சாலையில், குப்பைகள் அகற்றப்படாமல் குவிந்துள்ளதால், நோய் தொற்று அபாயம் அதிகரித்துள்ளது.

இந்த சாலை வழியாக, கோத்தகிரியில் இருந்து இயக்கப்படும் வாகனங்கள், ஊட்டி, குன்னுார் உட்பட, ஏராளமான கிராம பகுதிகளுக்கு சென்று வருகின்றன. குறிப்பாக, சுற்றுலா வாகனங்களின் இயக்கமும் அதிகமாக உள்ளது.

இப்பகுதியில், கோவில் மற்றும் குடியிருப்புகள் இருந்தும், அன்றாடம் கொட்டப்பட்டு வரும் குப்பைகள் அகற்றப்படாமல் சாலையில் தேங்கி கிடக்கின்றன. இதனால், துர்நாற்றத்துடன், கொசு தொல்லை அதிகரித்து, மக்களுக்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இது குறித்து இப்பகுதி மக்கள் பல முறை நகராட்சியில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, போக்குவரத்து நிறைந்த சாலையில் குவிந்துள்ள குப்பைகளை, உடனுக்குடன் அகற்ற நகராட்சி நிர்வாகம், நடவடிக்கை எடுப்பது வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us