ADDED : ஜூலை 20, 2026 06:45 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் மேலுார் ஒசட்டி கிராமத்தில் காஸ் சிலிண்டர்கள் முறையாக வினியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் மேலுார் கிராமத்தில் பாரத் காஸ் நிறுவனம் சார்பில், காஸ் சிலிண்டர்கள் சரிவர வினியோகம் செய்வதில்லை,’ என்ற குற்றச்சாட்டு உள்ளது.
ஏற்கனவே நீண்ட நாட்கள் காஸ் சிலிண்டர் வினியோகம் இல்லாததால் மக்கள் முற்றுகையிட்டு போராடி உள்ளனர். தொடர்ந்து, மஞ்சூர் பகுதியில் இருந்து விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் இங்கு முறையாக காஸ் சிலிண்டர் வழங்கவில்லை என பொது மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இங்குள்ள மேலுார் அரசு ஆரம்ப பள்ளிக்கான காஸ் சிலிண்டர் வழங்காததால் அடிக்கடி சத்துணவு சமைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, முறையாக காஸ் சிலிண்டர் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
