/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கடும் வெயிலில் சென்றால் ஞாபக சக்தி குறைந்துவிடும்
/
கடும் வெயிலில் சென்றால் ஞாபக சக்தி குறைந்துவிடும்
ADDED : ஏப் 27, 2024 01:08 AM

மேட்டுப்பாளையம்:கடும் வெயிலில் வெளியே சென்றால், ஞாபக சக்தி குறைந்துவிடும் என காரமடை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இக்காலகட்டத்தில், அம்மை, மம்ஸ், பூஞ்சை காளான் போன்ற நோய்கள் அதிகம் தாக்கும். காலை 10 மணி முதல் மதியம் 3 வரை மக்கள் அவசர தேவையின்றி வெளியே வரவேண்டாம்.
உடல் எடைக்கு ஏற்றவாறு தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். பழங்கள், தண்ணீர் சத்து மிக்க காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். மட்டன், சிக்கன் போன்ற அசைவ உணவுகளை மிகவும் குறைவாக தான் உட்கொள்ள வேண்டும். தவிர்ப்பது நல்லது. மனித உடலில் வெயில் அதிகம் படும் போது, அதனால் ஏற்படும் உஷ்ணம் காரணமாக டயோரியா, அலர்ஜி போன்றவைகள் ஏற்படலாம். கடும் வெயிலில் சென்றால், நீர்ச்சத்து குறைந்து மயக்கம் அடையலாம். ஞாபக சக்தி குறைந்துவிடும்.
ஏ.சி.,யிலேயேஇருக்க கூடாது. ஒரு மணி நேரம் அல்லதுஇரண்டு மணிநேரம்மட்டுமே ஏ.சி.,யில் இருக்க வேண்டும்.
மனித உடல், வண்டியின் இன்ஜின் மாதிரி. இன்ஜினுக்கு தேவையான ஆயில், ரேடியேட்டருக்கு தேவையான தண்ணீர் ஊற்றுவது போல், நாம் நம் உடலுக்கு தேவையான சத்துகள், தண்ணீரை கொடுக்க வேண்டும். கேன் வாட்டர்களில் தாது சத்துகள் இல்லை. தண்ணீரை சுட வைத்து, ஆறவைத்து குடிப்பது மிகவும் நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.

