/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பூமியின் வெப்பநிலை உயரும் கருத்தரங்கில் தகவல்
/
பூமியின் வெப்பநிலை உயரும் கருத்தரங்கில் தகவல்
ADDED : ஆக 23, 2024 02:39 AM

கோத்தகிரி;கோத்தகிரியில் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை குறித்து, தேசிய பசுமை படை திட்ட மாணவர்களுக்கு சிறப்பு கருத்தரங்கு மற்றும் பயிற்சி முகாம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கோத்தகிரி அரிமா சங்கத் தலைவர் ராமச்சந்திர ரெட்டி தலைமை வகித்தார்.தொழிலதிபர் போஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ராஜூ பேசுகையில், ''வரும், 2100ம் ஆண்டுக்குள் பூமியின் வெப்பநிலை, 5 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும். புவி வெப்பமாவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுப்பது அவசியம்,'' என்றார்.
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மனோகரன் பேசுகையில், ''புவி வெப்பத்திற்கு மூல காரணம் மக்களின் நுகர்வு பேராசையும், வரைமுறை இல்லாத நுகர்வும் தான் காரணம்,'' என்றார்.
விஞ்ஞானி ஜனார்த்தனன், 'புவி வெப்பத்திற்கு காரணமான லாமினோ' குறித்து பேசினார்.
தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவதாஸ், 'மூலிகை செடிகள் வளர்ப்பதன் முக்கியத்துவம்,' குறித்து விளக்கினார்.
நிகழ்ச்சியில், கோத்தகிரி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேம் தலைமையில் தீயணைப்பு துறையினர், பேரிடர் காலத்தில் நாம் மேற்கொள்ள வேண்டிய தற்காப்பு நடவடிக்கை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். தன்னார்வலர் அருண் பெள்ளி நன்றி கூறினார்.