நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : துடியலூர் அடுத்த வட்டமலை பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
இதில், பல்வேறு நிறுவனங்கள் கலந்து கொண்டன. நிகழ்ச்சியில், மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் சஞ்சய் ராஜ்குமார், ஆட்டோ மொபைல் துறை மாணவர் திவ்யேஷ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் துறை மாணவி சண்முகி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றனர்.
வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களை எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாகத்தினர், கல்லூரி முதல்வர் உமா, துணை முதல்வர், பயிற்றுநர்கள் மற்றும் மாணவர்கள் வாழ்த்தினர்.

