/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கை பேரிடர் விழிப்புணர்வு முகாம்
/
இயற்கை பேரிடர் விழிப்புணர்வு முகாம்
ADDED : செப் 04, 2024 01:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு;நெல்லியாம்பதியில் இயற்கை பேரிடர் மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்ட சுகாதாரத் துறை, நெல்லியாம்பதி ஊராட்சி மற்றும் ஆரம்ப சுகாதார மையம் ஒருங்கிணைந்து, நேற்று காலை நெல்லியாம்பதி கைகாட்டி சுகாதார மையத்தில் 'இயற்கை பேரிடர் மற்றும் தொற்றுநோய் கட்டுப்பாடு' குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்தினர்.
ஆரம்ப சுகாதார மைய அதிகாரி லட்சுமி தொற்று நோய் குறித்து தெரிவித்தார். கொசுக்களால் பரவும் நோய்கள் பற்றி சுகாதார ஆய்வாளர் ஜாய்சன் விளக்கினார். இளநிலை சுகாதார ஆய்வாளர்கள் அப்சல், சைனு சன்னி ஆகியோர் பேசினர்.