/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணி
/
தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணி
ADDED : ஏப் 23, 2024 02:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;தாவரவியல் பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.
ஊட்டி அரசு தாரவியல் பூங்காவுக்கு ஆண்டு தோறும், 35 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நடப்பாண்டின் மலர் கண்காட்சி அடுத்த மாதம், 5 நாட்கள் நடக்கிறது.
இதற்காக, பூங்காவில், 5 லட்சம் மலர்கள் தயார்படுத்தும் பணி முழு வீழ்ச்சில் நடந்து வருகிறது.
இங்குள்ள பிரமான புல்தரை மைதானத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
பூங்கா வளாகத்திற்குள் சேதமான நடைப்பாதைகள் சீரமைக்கப்பட்டு வருகிறது.
பூங்காவில் ஆங்காங்கே வர்ணம் பூசி பொலிவுப்படுத்தும் பணி துரித கதியில் நடந்து வருகிறது.

