/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் துாய்மை பணியாளர்கள் அவதி
/
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் துாய்மை பணியாளர்கள் அவதி
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் துாய்மை பணியாளர்கள் அவதி
பாதுகாப்பு உபகரணம் இல்லாமல் துாய்மை பணியாளர்கள் அவதி
ADDED : ஜூலை 03, 2024 09:12 PM

பந்தலுார் : பந்தலுார் பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
நெல்லியாளம் நகராட்சியில் மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. இந்த பகுதி கிராமங்கள் மற்றும் கடை வீதிகளில் குப்பைகளை சேகரிக்கவும், கழிவு நீர் கால்வாய் சீரமைப்பு மற்றும் திடக்கழிவு மேலாண்மையில் குப்பைகள் பிரிக்கும் பணியில், ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
கூடலுார் பகுதியை சேர்ந்த தனியார் ஒருவர் மூலம் ஒப்பந்தம் எடுக்கப்பட்டு, பணி வழங்கப்பட்டு வரும் நிலையில் துாய்மை பணியாளர்களுக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை.
தற்போது, பருவமழை பெய்து வரும் நிலையில், குப்பைகள் மற்றும் கழிவுகளில் புழுக்கள் மற்றும் கொசுக்கள் அதிகம் காணப்படுகிறது. இவற்றை 'பிளாஸ்டிக்' உறைகளை கையில் போட்டுக்கொண்டு சேகரிப்பதுடன், சாதாரண செருப்புகளை அணிந்து குப்பை வண்டியில் நிற்பதாலும், குப்பைகளை அகற்றுவதாலும் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
இவர்களுக்கு தரமான கையுறை மற்றும் ஷூ, மழை கோட்டு போன்றவை வழங்கப்பட்டு, அடிக்கடி மருத்துவ பரிசோதனையும் வழங்க வேண்டிய நிலையில், இதுபோல் பாதுகாப்பற்ற சூழலில் வேலை செய்ய அறிவுறுத்தப்படுவதால் பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறையினர் நேரடி ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.