ADDED : ஜூலை 03, 2024 10:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம் : ராக்கிபாளையத்தில் கட்டப்பட்டுள்ள புதிய பயணிகள் நிழல் குடையை கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
கோவை-மேட்டுப்பாளையம் ரோட்டில் தொப்பம்பட்டி பிரிவு, ராக்கிபாளையம் பிரிவு ஆகிய இடங்களில் பஸ்சுக்காக தினமும் நுாற்றுக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். அவர்களுக்கு நிழற்குடை கட்டிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையொட்டி பொதுமக்களின் அன்றாட தேவைக்காக எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் வாயிலாக பயணிகள் நிழற்குடை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இதை கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், எமரால்டு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் சீனிவாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.