ADDED : ஆக 15, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டியில் சுதந்திர தின நிகழ்ச்சியில் நடந்த சிலம்பாட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது.
ஊட்டி அரசு கலை கல்லுாரி மைதானத்தில் சுதந்திர தின நிகழ்ச்சி நடந்தது. அதில், மாவட்ட சிலம்பாட்ட கழகத்துடன் இணைந்து செயல்படும், வெடிமருந்து தொழிற்சாலை சிலம்பம் கூட மாணவர்களின் சிலம்பாட்டம் நடந்தது. அதில், மாணவர்களின் செயல்பாடு அனைவரையும் கவர்ந்தது. ஏற்பாடுகளை, தலைமை பயிற்சியாளர் விஜய்பாபு, மாவட்ட சிலம்பாட்ட கழக செயலாளர் முத்துமாரியப்பன், பயிற்சியாளர்கள் முருகாண்டி, உதய்குமார் செய்திருந்தனர்.

