/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்
/
வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்
வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்
வனத்தில் பரவிய காட்டுத்தீ: மரங்கள் எரிந்து சாம்பல்
ADDED : மே 05, 2024 12:36 AM

ஊட்டி;கோரகுந்தா வனத்தில் பரவிய காட்டு தீயால் பல ஏக்கரில் மரங்கள் எரிந்து சாம்பலானது.
நீலகிரி வனக்கோட்டம், கோரகுந்தா வனப்பகுதி பல ஏக்கர் கொண்டதாகும். தமிழக - கேரளா எல்லையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் விலை உயர்ந்த காட்டு மரங்கள், மூலிகை செடிகள் மற்றும் வன விலங்குகள் அதிகளவில் உலா வருகிறது. கோடை வறட்சியால் கோரகுந்தா வனப்பகுதியில் செடி, கொடிகள் காய்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம், கேரளா வனத்தில் பரவிய காட்டு தீ, வராகா பள்ளம் வனத்திலிருந்து மேல் நோக்கி பரவி கோரகுந்தா வனப்பகுதியில் பரவியது. கட்டுக்கடங்காத காட்டு தீ பரவலால் கடந்த இரண்டு நாட்களாக காட்டு தீ எரிந்து கொண்டிருக்கிறது. வனத்தில் இருந்த சீகை, கற்பூரம் மற்றும் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலானது.
வனத்துறையினர் ஆங்காங்கே தீ தடுப்பு கோடுகள் அமைத்துள்ளனர். ஆனாலும், கடும் வறட்சியால் தீயை கட்டுப்படுத்த முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். கோரகுந்தா வனப்பகுதியில் ரேஞ்சர் தலைமையில் வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.