ADDED : அக் 26, 2025 08:52 PM
குன்னுார்: குன்னுார் நகராட்சிமார்க்கெட்டில், இரவு நேரத்தில், 12 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் மார்க்கெட் கடைகளுக்கு, நகராட்சி வாடகை வசூலித்து வருகிறது.
பல ஆண்டுகளாக வாடகையை உயர்த்தாமல் இருந்த நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் உயர்த்தப்பட்டது.
இதில்,, 2016 ஆண்டில் இருந்து 4 ஆண்டுகளுக்கான பழைய நிலுவை வாடகையையும் வசூலித்து வருகிறது.
வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு அவ்வப்போது சீல் வைக்கும் நகராட்சி, வியாபாரிகள் கடன்களை வாங்கி செலுத்திய பிறகு மீண்டும் சீல் அகற்றப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, 12 கடைகளுக்கு, உதவி வருவாய் அலுவலர் சரவணன், வருவாய் ஆய்வாளர் சையது இப்ராகிம் தலைமையில் ஊழியர்கள் சீல் வைத்தனர்.
இதில், நேற்று காலையில், ஆளும் கட்சியை சேர்ந்த வெற்றிலை கடை சீல் அகற்றப்பட்டு திறக்கப்பட்டது. போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் அந்த கடைக்கு மீண்டும் சீல் வைத்தனர்.

