தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ரயில்வேயில் 1265 காலி பணியிடங்கள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ரயில்வேயில் 1265 காலி பணியிடங்கள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

ரயில்வேயில் 1265 காலி பணியிடங்கள்: பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : நவ 10, 2026 02:23 PM

ADDED : நவ 10, 2026 02:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 02:23 PM ADDED : நவ 10, 2026 02:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ‘மத்திய அரசில் காலியாக உள்ள, 1,265 ரயில்வே பணிக்கு விருப்பமுள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை ; மத்திய அரசின் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வாயிலாக , 1,265 நிலைய அதிகாரி காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், www.rrbapply.gov.in என்ற அதிகார பூர்வ இணைய தளம் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

கணினி வழி தேர்வுகள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை வாயிலாக விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்ப கட்டணம் எஸ்.சி. , எஸ்.டி. , பெண்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு , 250 ரூபாய் , இதர பிரிவினருக்கு , 500 ரூபாய், நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாவட்ட தேர்வர்களுக்காக, நீலகிரி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் கட்டணமில்லா இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. விருப்பமுள்ள தேர்வர்கள் உடனடியாக மையத்தை அணுகி தங்கள் பெயர்களை பதிவு செய்து இப்பயிற்சியில் சேர்ந்து பயனடைய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us