தேயிலை தோட்டத்தில் மலை பாம்பு: மீட்கப்பட்டு வனத்தில் விடுவிப்பு
தேயிலை தோட்டத்தில் மலை பாம்பு: மீட்கப்பட்டு வனத்தில் விடுவிப்பு
UPDATED : நவ 10, 2026 05:05 PM
ADDED : நவ 10, 2026 02:29 PM

பந்தலுார்: பந்தலுார் அருகே முக்கட்டி பகுதி தேயிலை தோட்டத்தில் காணப்பட்ட மலைப்பாம்பு மீட்கப்பட்டு வனத்தில் விடுவிக்கப்பட்டது.
பந்தலுார் அருகே பிதர்காடு வனச்சரக எல்லைக்கு உட்பட்ட, முக்கட்டி பகுதியில் குடியிருப்புகள் அருகே தேயிலை தோட்டத்தில் இன்று (நவ.,10) காலை, மலைப்பாம்பு ஒன்று காணப்பட்டதாக, வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனக்குழுவினர் அப்பகுதிக்கு சென்று மலைப்பாம்பை மீட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விடுவித்தனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'தற்போது, மழை குறைந்து வெயிலான காலநிலை நிலவிவரும் நிலையில், வனப்பகுதிகளை விட்டு பாம்பு போன்ற ஊர்வன வகை வன விலங்குகள் வந்தால், அது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதனை தாக்குவது அல்லது பிடிப்பது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட கூடாது,' என்றனர்.
