/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மோட்சராகினி ஆலயத்தின் 187வது ஆண்டு விழா ஆடம்பர தேர் பவனியால் பரவசம்

ADDED : ஆக 17, 2025 09:32 PM

ஊட்டி; துாய மோட்சராகினி பேராலய, 187வது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தின் முதல் கத்தோலிக்க பேராலயமான துாய மோட்சராக்கினி அன்னை பேராலயத்தின், 187வது ஆண்டு விழா கடந்த, 3ம் தேதி துவங்கியது. நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பங்கு திருவிழா மற்றும், 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
நேற்று முன்தினம் காலை,6:15 மணிக்கு முதல் திருவிழா திருப்பலியை பங்கு குரு பெனடிக்ட், மறைமாவட்ட ஆன்ம குரு ஞானதாஸ் மற்றும் உதவி பங்கு குரு டினோ பிராங்க் ஆகியோர் சிறப்பித்தனர் .
ஆங்கில திருப்பலியை ஆயர் செயலர் இம்மானுவேல் அந்தோணி சிறப்பித்தார். புனித சூசையப்பர் ஆ லய பங்கு குரு சிஜோ ஜார்ஜ் மலையாளத்தில் திருப்பலி நிறை வேற்றினார். மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் மூவர்ண கொடியை ஏற்றிவைத்து பேசினார். அன்னையின் ஆடம்பர தேர் பவனி ஆலயத்தில் துவங்கி பஸ் ஸ்டாண்ட் வரை சென்றது.