/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தோட்ட தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் போனஸ் இ. கம்யூ., ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

ADDED : அக் 07, 2025 12:01 AM

கூடலுார்:கூடலுாரில் இ.கம்யூ., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 'தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
கூடலுார் புதிய பஸ் நிலையம் அருகே, இ.கம்யூ., ஏ.ஐ.டி.யு.சி., சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இ.கம்யூ., தாலுகா செயலாளர் முகமதுகனி தலைமை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட துணை செயலாளர் குணசேகரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 'வனவிலங்கு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்; வனவிலங்கு தாக்கி உயிரிழந்த குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்; தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கு, 20 சதவீதம் போனஸ் வழங்க அரசு உத்தரவு வழங்க வேண்டும்; வீடு இல்லாத தோட்ட தொழிலாளர்களுக்கு இலவச வீடுகள் வழங்கவும், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், பொருளாளர் ராஜு, நிர்வாகிகள் ரவி, நாசர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு பழங்குடி சங்க மாவட்ட அமைப்பாளர் மகேந்திரன் நன்றி கூறினார்.