/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
லட்சுமி நாராயணபுரம் கோவிலில் உறியடி உற்சவ விழா
/
லட்சுமி நாராயணபுரம் கோவிலில் உறியடி உற்சவ விழா
ADDED : அக் 07, 2025 12:00 AM

ஊட்டி;ஊட்டி அருகே வண்டிசோலை லட்சுமி நாராயணபுரம் பெருமாள் கோவிலில், உறியடி மஹோற்சவம் நடந்தது.
ஊட்டியில் பிரிசித்தி பெற்ற இக்கோவிலில், ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில், உறியடி உற்சவம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு நடந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பல்வேறு பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பெருமாளை வழிப்பட்டு, பக்தி பாடல்கள் பாடினர். தொடர்ந்து உறியடி உற்சவம் நடந்தது.
சிறப்பு பூஜையை தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஜெய நாராயண சுஜன சமரச நலசங்கம், ஆலய மகளிர் அமைப்பு, ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.