/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கேழ்வரகு பறிமுதல்
/
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கேழ்வரகு பறிமுதல்
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கேழ்வரகு பறிமுதல்
கர்நாடகாவுக்கு கடத்த முயன்ற 300 கிலோ கேழ்வரகு பறிமுதல்
ADDED : செப் 26, 2025 08:57 PM

கூடலுார்:
கூடலுாரில் இருந்து கர்நாடகா அரசு பஸ்சில் கடத்த முயன்ற, 300 கிலோ கேழ்வரகை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், குடும்ப அட்டைதாரர்களுக்கு, தலா இரண்டு கிலோ கேழ்வரகு இலவசமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு வழங்கப்படும், கேழ்வரகு சிலர் வெளி மாநிலத்துக்கு கடத்துவதாக புகார் உள்ளது.
இந்நிலையில், கூடலுாரில் இருந்து கர்நாடகா அரசு பஸ்சில், கர்நாடகாவுக்கு கேழ்வரகு கடத்துவதாக வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது.
கூடலுார் வட்ட வழங்கல் அலுவலர் நடேஷன் மற்றும் ஊழியர்கள் நேற்று, மாலை புதிய பஸ் ஸ்டாண்டில் ஆய்வு செய்தனர். அப்போது, கர்நாடக அரசு பஸ்சில் ஏற்றுவதற்காக சில மூட்டைகள் வைக்கப்பட்டு இருந்தன.
அதனை ஆய்வு செய்தபோது அவை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கேழ்வரகு என்பது, தெரிய வந்தது. சிறிதும், பெரிதுமாக, 8 மூட்டைகளில் இருந்த, 300 கிலோ கேழ்வரகை பறிமுதல் செய்தனர். இதனை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது.