/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கழிப்பிட வசதி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை
/
கழிப்பிட வசதி இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை
ADDED : டிச 02, 2025 06:11 AM

பந்தலுார்: பந்தலுார் அருகே உப்பட்டி பஜார் பகுதியில், நகராட்சி கழிப்பிடம் இருந்தும் பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
உப்பட்டி பஜார் பகுதியில் நெல்லியாளம் நகராட்சி மூலம், கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில், ஒரு கழிப்பிடம் பயன்படுத்தாமல் சிதிலமடைந்து, தற்போது குப்பை மூட்டைகள் வைக்கும் இடமாக மாறி உள்ளது.
தற்போது, புதிதாக கட்டப்பட்ட கழிப்பிடத்தின், கழிவு தொட்டி தரமற்ற முறையில் சிறிய அளவில் அமைக்கப்பட்டதால், அடிக்கடி, தொட்டி நிறைந்து சாலையில், கழிவுகள் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படுவது தொடர்கிறது.
இதனால், கழிவறை அடிக்கடி பூட்டப்பட்டு, மக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்த முடியாமல் சிரமப்படும் நிலை ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த வாரம் கழிவுகள் நிறைந்து வெளியேறியதால், அவை அகற்றப்பட்டு கழிவு தொட்டி திறக்கப்பட்டது. திறந்து பல நாட்கள் கடந்தும், இதனை சீரமைத்து கழிப்பிடத்தை, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து செயல்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
பொது மக்கள் கூறுகையில், 'பொதுமக்களின் அவசர தேவைக்காக கட்டப்பட்டுள்ள, கழிப்பிடத்தை திறந்து, சுகாதார பாதிப்பை கட்டுப்படுத்த வேண்டும்,' என்றனர்.

