/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பந்தலுார் நுாலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
/
பந்தலுார் நுாலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
பந்தலுார் நுாலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
பந்தலுார் நுாலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
ADDED : அக் 16, 2025 08:21 PM

பந்தலுார்: பந்தலுார் நுாலகத்தில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பந்தலுார் நுாலகம் மற்றும் மகாத்மா காந்தி பொது சேவை மையம் இணைந்து, முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. நுாலகர் அறிவழகன் வரவேற்றார். நுாலகர் நித்திய கல்யாணி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் அப்துல் கலாமின் திரு உருவப்படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சிகள், மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நவ்ஷாத், துணைத் தலைவர் ஜெயலட்சுமி, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொது செயலாளர் சிவசுப்ரமணியம், நுாலக பணியாளர் சரஸ் வதி மற்றும் வாசகர்கள், வாகன ஓட்டுனர்கள் பங்கேற்றனர்.