/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இனிப்பு, காரம் விற்பனையில் சுகாதாரம் அவசியம்: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரிக்கை
/
இனிப்பு, காரம் விற்பனையில் சுகாதாரம் அவசியம்: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரிக்கை
இனிப்பு, காரம் விற்பனையில் சுகாதாரம் அவசியம்: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரிக்கை
இனிப்பு, காரம் விற்பனையில் சுகாதாரம் அவசியம்: உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரிக்கை
ADDED : அக் 16, 2025 08:21 PM
ஊட்டி: 'தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு, காரம் பலகாரப் பொருட்களை சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தீபாவளி பண்டிகை, 20ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை நாட்களில் அத்தியாவசியமானதாக இருக்கும், பலகாரங்கள் வாங்க பொதுமக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுவது வழக்கம்.
இந்நிலையில், இனிப்பு, காரம் மற்றும் பலகாரப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
வியாபாரிகளிடம் அவர்கள் கூறுகையில்,' இனிப்பு வகைகளுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக நிறமி சேர்க்க கூடாது. ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை கொண்டு, மறுபடியும் சூடுப்படுத்தி உணவு பொருட்கள் தயாரிக்க கூடாது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்,' என்றனர்.
குறைகள் இருந்தால் புகார் செய்யலாம் உணவு பாதுகாப்புத்துறை மாவட்ட அலுவலர் பிரபாவதி கூறியதாவது,''பண்டிகை நாட்களில் தற்காலிக இனிப்பு மற்றும் காரவகை தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், உணவு பாதுகாப்புத் துறையில் உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்ற பின்னரே பொதுமக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
இனிப்பு கார வகைகள் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., உரிமம் பெற்ற தரமான மூல பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
விதிமுறைகளை சரியாக பின்பற்றாமல் விற்பனை செய்யும் உணவு வணிகர்களுக்கு சட்ட படி நடவடிக்கை எடுக்கப்படும்.
விற்பனையில் ஏதாவது குறைகள் இருந்தால், 94440-42322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் மக்கள் புகார் தெரிவிக்கலாம்,''என்றார்.