/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் 'ரோட்டரி கிளப்' ஏற்பாடு
/
பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் 'ரோட்டரி கிளப்' ஏற்பாடு
பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் 'ரோட்டரி கிளப்' ஏற்பாடு
பெண்களுக்கு ஓட்டுனர் உரிமம் 'ரோட்டரி கிளப்' ஏற்பாடு
ADDED : அக் 16, 2025 08:22 PM

கூடலுார்: கூடலுார், ரோட்டரி கிளப் சார்பில், 30 பெண்கள் உட்பட 40 பேருக்கு ஓட்டுனர் பயிற்சியுடன் ஓட்டுனர் உரிமம் பெற்று தருவதற்கான பணி துவக்கப்பட்டது.
கூடலுார் வேலி ரோட்டரி கிளப் சார்பில், 30 பெண்கள் உட்பட, 40 பேருக்கு ஓட்டுனர் பயிற்சியுடன் உரிமம் பெற்று தரும் பணியை துவங்கியுள்ளனர். இதற்கான துவக்க நிகழ்ச்சி, கூடலுார் ரோட்டரி கிளப் அலுவலகத்தில் நடந்தது.
ரோட்டரி கிளப் தலைவர் திவாகர் தலைமை வகித்தார். கூடலுார் டி.எஸ்.பி., வசந்தகுமார் பங்கேற்று, பெண்களுக்கு ஓட்டுனர் பயிற்சிக்கான உத்தரவை வழங்கி, போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கினார். ரோட்டரி கிளப் கோட்ட கவர்னர் பிரகாஷ் கூறுகையில், ''பெண்களும் ஓட்டுனர் பணியில் கால்பதிக்க உதவிடும் வகையில், ரோட்டரி கிளப் சார்பில், 30 பெண்கள் உட்பட, 40 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது,'' என்றார். நிகழ்ச்சியில், ஓட்டுனர் பயிற்சியாளர் ரெஜிஸ், ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பங்கேற்றனர்.