/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
268 துாய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு
/
268 துாய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு
ADDED : அக் 16, 2025 08:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஊட்டியில், 268 துாய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி துாய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
அதில், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, 'கடநாடு, துானேரி, எப்பநாடு, தொட்டபெட்டா, உல்லத்தி, பாலகொலா, முள்ளிகூர் , இத்தலார், நஞ்சநாடு, மேல்குந்தா, தும்மனட்டி, கக்குச்சி, கூக்கல்,' ஆகிய ஊராட்சி பகுதிகளில் பணிபுரிந்து வரும், 268 துாய்மை காவலர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பாக, வேட்டி, சேலை, இனிப்பு வகைகள் மற்றும் ஊக்க தொகையாக, 1,000 ரூபாய் வழங்கப்பட்டது.