/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பண்டிகை நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள்; உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு
/
பண்டிகை நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள்; உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு
பண்டிகை நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள்; உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு
பண்டிகை நாட்களில் கூடுதல் சிறப்பு பஸ்கள்; உள்ளூர் மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : அக் 07, 2025 08:59 PM

கூடலுார்; கூடலுார் பகுதி தேயிலை விவசாயம் மற்றும் தேயிலை கூலி தொழிலை மட்டும் நம்பியுள்ளது. வேறு வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையில், இங்குள்ள இளைஞர்கள், பெண்கள் கோவை, ஈரோடு, திருப்பூர், சென்னை பெங்களூரு பகுதிகளுக்கு சென்று தனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்களும் சமவெளி பகுதிக்கு சென்று கல்லுாரியில் கல்வி கற்று வருகின்றனர். இவர்கள் வீட்டு விசேஷங்கள் மற்றும் முக்கிய பண்டிகை நாட்களில் மட்டுமே கூடலுார் சுற்றுப்புற பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், தசரா ஆயுத பூஜை விடுமுறையை தொடர்ந்து, இவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து கூடலுார் பகுதிக்கு வந்து, குடும்பத்துடன் ஆயுத பூஜையை கொண்டாடினர். விடுமுறை முடிந்து, கடந்த மூன்று நாட்களாக மீண்டும் சமவெளி, கர்நாடக பகுதிகளுக்கு புறப்பட்டனர்.
இந்நிலையில், கூடலுாரில் இருந்து சமவெளிப்பகுதிகளுக்கு கூடுதல் பஸ்இல்லாததால், பயணிகள்கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பலர், பஸ்சில் இருக்கைகள் கிடைக்காமல், நின்றுகொண்டு பயணம் செய்தனர். முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் பஸ் கிடைக்காமல் அதிருப்தி யுடன் திரும்பி சென்றனர்.
பயணிகள் கூறுகையில்,'வெளியூர்களில் பணியாற்றி வரும் கூடலுாரை சேர்ந்தவர்கள், தீபாவளிக்கு கூடலுார் வந்து, குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடிவிட்டு, மீண்டும் திரும்பி செல்ல உள்ளனர். அப்போது, பயணிகள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு, தீபாவளிக்கு முன்பும், பின்பும் இப்பகுதிகளுக்கு- கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க, போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.