/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வளரின பருவக் கல்வி நாட்டுப்புற நடன போட்டி
/
வளரின பருவக் கல்வி நாட்டுப்புற நடன போட்டி
ADDED : நவ 06, 2025 11:03 PM

கோத்தகிரி: கோத்தகிரி ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) வளாகத்தில், வளரின பருவம் கல்வி குறித்த நாட்டுப்புற நடன போட்டி வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், தேசிய மக்கள் தொகை கல்வி திட்டம் வாயிலாக, 8ம் மற்றும் 9ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது.
டயட் முதல்வர் சேகரன் தலைமை வைத்தார். மிளிதேன் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சூசைனி மேத்தியூஸ், நாட்டுப்புறக் கலைஞர் கணேசன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, 14 பள்ளிகள் போட்டியில் பங்கேற்றன. இதில், கூக்கல்தொரை அரசு உயர்நிலைப்பள்ளி, முதல் இடத்தையும், ஊட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, இரண்டாம் இடத்தையும், புளியம்பாறை அரசு உயர்நிலைப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பெற்றன. முதலிடத்தில் வெற்றி பெற்ற கூக்கல் துரை அரசு உயர்நிலைப்பள்ளி மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

